சிதம்பரத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்! 400 பேருக்கு நிலவேம்பு பவுடர்
சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம் இணைந்து வாசவி மஹாலில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாமை புதன்கிழமை
சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம் இணைந்து வாசவி மஹாலில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாமை புதன்கிழமை நடத்தியது.
காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் ஜி.முரளிதரன் முன்னிலை வகித்தார். மருத்துவர் சா.செந்தில்குமார் வரவேற்றார். சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் முகாமை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில் டெங்கு நோய் வராமல் தடுப்பதற்கான அவசியம் குறித்தும், நிலவேம்பு நீர் அனைவரும் அருந்த வேண்டியதின் அவசியம் குறித்தும் தெரிவித்தார். முகாமில் வட்டாட்சியர் எம்.விஜயா டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு முறை குறித்த ஆலோசனைகளை வழங்கினார். முகாமில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு கடலூர் மாவட்ட சித்த வைத்தியர் சங்க மருத்துவர்கள் அ.ரவி, எல்.பூபதி, அடைக்கலம் தேவி ஆகியோர் பதில் அளித்தனர்.
முகாமில் ஜோதி ஹெர்பல்ஸ் கேர் சென்டர் சார்பில் மூலிகை நீர், நிலவேம்பு பவுடர் பாக்கெட்டும் 400 பேருக்கு வழங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை மருத்துவர் ஜி.ஆர்.குருநாதன் வெளியிட, தொழிலதிபர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். முகாமிற்கான ஏற்பாடுகளை காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் சி.சமுத்திரராஜகுமார், செயலாளர் ஜி.முரளிதரன், பொருளாளர் பி.விஷால்ஜெயின் ஆகியோர் செய்திருந்தனர்.