நகராட்சி சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தேமுதிக முடிவு
சிதம்ரரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டிக்கு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிதம்ரரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டிக்கு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில மாநாடு குறித்த செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரம் தெற்குவீதி ஏ.ஆர்.மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ஆர்.ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ்.சிவானந்தம் வரவேற்றார்.மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆர்.பாலு, விஜயசம்பத், ஆர்.பி.ராஜா, வி.எஸ்.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேமுதிக மாநில துணைச் செயலாளர் பி.முருகேசன், மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏ.தமிழரசன், பி.முகமதுஅய்யூப், பொதுக்குழு உறுப்பினர் என்.ஜெயபாலன், ஒன்றியச் செயலாளர்கள் ஏ.சீனுசங்கர், ஆர்.பானுசந்தர், வி.எஸ்.ராஜவேல், பி.சத்யாகொளஞ்சி, எஸ்.ஜெயமணிகண்டதேவன், பி.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுக்கும் பயிற்சி அளிப்பது, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கு அதிக வாகனங்களில் சென்று பங்கேற்பது, தில்லிவாழ் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர தில்லி சென்று குரல் கொடுத்த கேப்டன் விஜயகாந்திற்கு நன்றி தெரிவிப்பது, சிதம்பரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, தலைவர் விஜயகாந்த் மீதும், தேமுதிக எம்எல்ஏக்கள் மீதும் தமிழகஅரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.