ஆப்ரேசன் ஹம்லா ஒத்திகை: தூத்துக்குடி கடலோர பகுதியில் 4 பேர் கைது
தமிழக கடலோர பகுதிகளில் "ஆப்ரேசன் ஹம்லா' என்ற பெயரில் போலீஸாரின் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கியது. தமிழகத்தின் கடலோர கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம் உள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் "ஆப்ரேசன் ஹம்லா' என்ற பெயரில் போலீஸாரின் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கியது. தமிழகத்தின் கடலோர கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம் உள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கடலோரப் பகுதி மக்களும், போலீஸாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த ஆபரேசன் ஹாம்லா ஒத்திகை நிகழ்த்தப்படுகிறது.
அந்த வகையில் இன்று தூத்துக்குடி கடலோரப்பகுதியில் நடத்தப்பட்ட ஒத்திகையின் போது 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து நடத்தி வரும் இந்த ஒத்திகை இரண்டு நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.