லாரி மோதி அதிமுக கிளைச் செயலர் சாவு
பெரம்பலூரில், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 8-வது வார்டு அதிமுக கிளைச்செயலர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூரில், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 8-வது வார்டு அதிமுக கிளைச்செயலர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்தவர் மருதமுத்து மகன் நாகராஜ் (42). 8-வது வார்டு அதிமுக கிளைச் செயலரான இவர், செவ்வாய்க்கிழமை காலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சென்னையிலிருந்து கரூருக்கு உரம் ஏற்றிச்சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து, அவரது உறவினர் சிதம்பரம் (58) அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் சர்புதீன், துறையூர் அருகே உள்ள புடலாசி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் லாரி ஓட்டுநர் சுந்தர்ராஜை (23) கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தார்.