தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 610 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சு.
தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 610 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சு. நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த 31-ம் தேதி 1,39,610 டன் சரக்குகளை ஒரே நாளில் கையாண்டு புதிய சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 11.7.2009 அன்று ஒரே நாளில் 1,17,641 டன் சரக்குகள் கையாளப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது.அதிக அளவில் தொழிலக மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு உண்டான கரி இறக்குமதி செய்யப்பட்டதால் இந்த சாதனை படைக்க முடிந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 45,691 சரக்கு பெட்டகங்கள் கையாண்டு இதற்கு முன் 2008-ம் ஆண்டில் ஒரே மாதம் கையாண்ட அதிகபட்ச சரக்கு பெட்டகங்களான 45,126 சரக்கு பெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை புரிந்துள்ளது.
இந்த சாதனை படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், துறைமுகசபை உறுப்பினர்கள், துறைமுக துறை தலைவர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், சரக்குப்பெட்டகங்களை கையாளும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன்.இந்த சாதனையை தொடந்து, மத்திய கப்பல்துறை அமைச்சகம் நிர்ணயித்த 2013-14 ஆம் நிதியாண்டுக்கான குறியீடு 30 மில்லியன் டன் சரக்கையும், 5.04 லட்சம் சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு, சாதனை புரிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.