திருநெல்வேலி மாவட்டம்,செங்கோட்டை கண்ணுப்புளிமெட்டு பகுதியில் இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
செங்கோட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட கண்ணுப்புளிமெட்டு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் காதலர்கள் இருவர் இறந்தநிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் பிரேதங்களை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.சோதனையின் போது அவர்களிடமிருந்த அடையாள அட்டைகள் மூலம் இறந்தவர்கள் அடையாளம் தெரியவந்தது.அவர்கள்,விருதுநகர்மாவட்டம் பாலன்நகர் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் செந்தில்குமார்(25), மதுரைமாவட்டம் கோட்டைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி(20) என்பது தெரியவந்துள்ளது.
செந்தில்குமார் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.ரமாதேவி,மதுரையில் உள்ள ஒரு டீச்சர் டிரெயினிங் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார்.இப்பகுதிக்கு திங்கள்,அல்லது செவ்வாய்க்கிழமை வந்து,குளிர்பானத்தில் விஷத்தை கலந்துகுடித்திருக்கலாம் என தெரிகிறது.மேலும் ரமாதேவியின் கழுத்தில் புதிய தாலி கயிறு இருந்துள்ளதால் புதிதாக திருமணம் செய்துவிட்டு இங்கு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்களுடைய உறவினர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.