முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் எரிபொருள் சிக்கனம் குறித்து காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி

பேரணி கீழவீதி காமராஜர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு நான்குவீதிகள் வழியாக காந்திசிலையை அடைந்தது. நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:32 PM
பகிர்:

சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பேரணி கீழவீதி காமராஜர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு நான்குவீதிகள் வழியாக காந்திசிலையை அடைந்தது. நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார் வரவேற்றார். மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்டச் செயலாளர் கே.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா, வாசன் பேரவைத் தலைவர் தில்லை கோ.குமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் துரை.சிங்காரவேலு, சி.பி.ரத்தினம், மாவட்ட மூப்பனார் பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.வெங்கடேசன், நகர துணைத் தலைவர் என்.இளங்கோவன், ஆர்.சம்மந்தமூர்த்திஸ நகர பொதுச்செயலாளர் கட்டாரி சந்திரசேகர், மகளிரணி நிர்வாகிகள் ஜி.சந்தானமேரி, கோ.ஜனகம், மீனாசெல்வம், ஆர்.சுப்புலட்சுமி, பி.ருக்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலாளர் துரைமுருகன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →