விருதுநகர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் மேஜை, நாற்காலிகள் மற்றும் மின்விசிறி உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு பின்புறம் காட்டுப் பகுதியில் மகளிர் திட்ட துணை அலுவலக பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் இரவு நேரங்களில் காப்பாளர் இல்லாமல் தனியாக இருக்கிறது. இதனால், வெள்ளிக்கிழமை மாலையில் பணியாளர்கள் மகளிர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அறையை சுத்தம் செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது, கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதையடுத்து, உள்ளே சென்று பார்க்கையில் மேஜை, நாற்காலிகள் மற்றும் மின்விசிறிகள் ஆகியவைகளை ஆள்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் மகளிர் திட்ட அலுவலர் பிச்சை சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் திருடு போன பொருள்களின் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.