முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் தாலுக்காவில் 91 விநாயகர்சிலைகள் பிரதிஷ்டை: 11-ம் தேதி கொள்ளிடம் ஆறு மற்றும் கடலில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் தாலுக்காவில் மொத்தம் 91 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:35 PM
பகிர்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் தாலுக்காவில் மொத்தம் 91 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிதம்பரம் நகரில் சத்யாநகர், இளமையாக்கினார் கோயில்தெரு, மேலவீதி, நேதாஜிதெரு, வ.உ.சி.தெரு, சுப்பிரமணியர்தெரு, வாகீசநகர், குஞ்சரமூர்த்தி விநாயகர்தெரு, திரெளபதி அம்மன் கோயில் தெரு, 1வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் 5 அடி உயரத்திலான மொத்தம் 11 விநாயகர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் சிதம்பரம் தாலுக்கா பகுதியில் 6 சிலைகளும், கிள்ளையில் 5 சிலைகளும், அண்ணாமலைநகரில் 14 சிலைகளும், புவனகிரியில் 8 சிலைகளும், மருதூரில் 8 சிலைகளும், பரங்கிப்பேட்டையில் 22 சிலைகளும், புதுச்சத்திரத்தில் 91 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்தி சிலைகள் அனைத்தும் வருகிற செப்.11-ம் தேதி சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றிலும், சாமியார்பேட்டை, பெரியகுப்பம் பகுதி கடலிலும் கரைக்கப்படவுள்ளது. சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மேற்பார்வையில் அனைத்து சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிதம்பரம் நகரில் விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதி, மேலவீதியில் உள்ள சிறைமீட்ட விநாயகர் கோயில், வடக்குவீதியில் உள்ள திருப்பணி விநாயகர் கோயில், தெற்குவீதியில் உள்ள நரமுகவிநாயகர் கோயில், கீழரதவீதியில் உள்ள அரசமரத்தடி விநாயகர் கோயில், பெரியார்தெருவில் உள்ள கூத்தாடும் விநாயகர் கோயில், போல்நாராயணன்தெருவில் உள்ள ஞானவிநாயகர் விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கொழுக்கட்டை மற்றும் சுண்டல் விநியோகிக்கப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை தரிசித்தனர்.

விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் மேலரதவீதியில் விநாயகர்சிலை மற்றும் அபிஷேக பொருள்கள் வாங்க திரளான மக்கள் குவிந்தனர். இதனால் மேலரதவீதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வேறு வழியாக திருப்பி விடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →