முகப்பு
தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு நீதிமன்றத்தில் ஆஜர்

சொத்து குவிப்பு வழக்கி விசாரணைக்காக தமிழக முன்னாள் உணவுத் துறை அமைச்சர் ஏ.வ. வேலு செவ்வாயன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:

சொத்து குவிப்பு வழக்கி விசாரணைக்காக தமிழக முன்னாள் உணவுத் துறை அமைச்சர் ஏ.வ. வேலு செவ்வாயன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஏ.வ. வேலு, தண்டராம்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏவாக இருக்கும் போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

2002ஆம் ஆண்டு இறுதியில் திருவண்ணாமலையில் அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த வழக்கு விசாரணைக்காக திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஏ.வ. வேலு மற்றும் அவரது மனைவி ஆஜராயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.