முகப்பு
தற்போதைய செய்திகள்

உதவிப்பொறியாளருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு!

சிதம்பரம் எம்.கே.தோட்டம் பிச்சமுத்து நகரில் வசிக்கும் விஜயலட்சுமி. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளராக உள்ளார். இவருக்கு செல்போனில் பல்வேறு நம்பர்களில் இருந்து வீரமணி,

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:50 AM
பகிர்:

சிதம்பரத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் எம்.கே.தோட்டம் பிச்சமுத்து நகரில் வசிக்கும் விஜயலட்சுமி. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளராக உள்ளார். இவருக்கு செல்போனில் பல்வேறு நம்பர்களில் இருந்து வீரமணி, முத்துமதி, மணிவாசகம், சதீஷ் என்ற பெயர்களில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயலட்சுமியின் சகோதரர் சுப்பிரமணியசாமி கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →