தொழிலாளி அடித்துக் கொலை: மைத்துனர் கைது
தூத்துக்குடி அம்பேத்கர்நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுப்புலட்சுமியின் தம்பி மாரிமுத்து (38)
தூத்துக்குடியில் செல்போன் காணாமல் போன தகராறில் கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மைத்துனர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அம்பேத்கர்நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுப்புலட்சுமியின் தம்பி மாரிமுத்து (38) அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர், தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பால்ராஜ் வீட்டில் இருந்த செல்போன் திருட்டு போனதாகக் கூறப்படுகிறது. அந்த செல்போனை மாரிமுத்து எடுத்ததாகக் பால்ராஜ் கூறி வந்தாராம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வழக்கம்போல, பால்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது செல்போன் திருட்டு தொடர்பாக மாரிமுத்துவை சம்பந்தப்படுத்தி பேசினாராம். அப்போது, ஏற்பட்ட தகாராறில் அங்கிருந்த உருட்டு கட்டையால் பால்ராஜை மாரிமுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த பால்ராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவம் குறித்து பால்ராஜின் மனைவி சுப்புலட்சுமி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீஸார் வழக்குப் பதிந்து பால்ராஜை கொலை செய்ததாக மாரிமுத்துவை கைது செய்தனர்.