தற்போதைய செய்திகள்

சார்பு ஆய்வாளரை தாக்கியதாக பா.ஜ.க, இந்து முன்னணியினர் 3 பேர் கைது

விருதுநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-வது படித்து வரும் குறிப்பிட்ட 29 மாணவர்கள் காலையிலும், மாலையிலும் கடந்த 11-ம் தேதி வரையில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு வருவதில்லையாம்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் சார்பு ஆய்வாளரை தாக்கியதாக இந்து முன்னணியினர் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-வது படித்து வரும் குறிப்பிட்ட 29 மாணவர்கள் காலையிலும், மாலையிலும் கடந்த 11-ம் தேதி வரையில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு வருவதில்லையாம். இந்நிலையில் 12-ம் தேதி பள்ளிக்கு காலாண்டுத் தேர்வுக்கு வந்துள்ளனர். அப்போது, அவர்களை அழைத்த தலைமை ஆசிரியர் ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை என கண்டித்துள்ளார். அதனால், உங்கள் வீட்டிலிருந்து பெற்றோர்களை அழைத்து வரும் படி கூறினாராம்.

அதன்படியே பெற்றோர்களை அழைத்து வரவே சமதானம் செய்து காலாண்டு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அந்த மாணவர்கள் பா.ஜ.க ஒன்றிச் துணை செயலாளர் ராம்தாஸ்(40), இந்து முன்னணி முழு நேர ஊழியர் ராஜா(36), இந்து முன்னணி ஒன்றியத் தலைவர் பாண்டி, இந்து முன்னணியின் முன்னாள் செயலாளர் அருள்ராஜ் உள்ளிட்டோரிடம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, அக்குறிப்பிட்டவர்கள் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியருடன் பிரச்னை செய்தனர்.

இதைக் கண்டித்து அரசு மருத்துவமனை முன்பு முக்குச்சாலையில் 15 மாணவர்களுடன் மறியல் செய்ய முயன்றனர். அதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். அங்கு மறியல் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி கூறினர். அதற்குள் ராம்தாஸ் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சார்பு ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்னை செய்து சட்டையை கிழித்தனர்.   இது தொடர்பாக சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார் கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராமதாஸ், ராஜா மற்றும் அருள்ராஜ் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பாண்டியை தேடி வருகின்றனர்.

மேலும், இது குறித்து தலைமையாசிரியர் நல்லதம்பி கூறுகையில், குறிப்பிட்ட மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தனர். அதனால், இதுபோன்றவர்களுக்கு தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் சரியாக கலந்து கொள்வதில்லை என்பதால் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்றேன். உடனே நடந்த நிகழ்வுகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதையடுத்து மாணவர்கள் தேர்வுக்கூட அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, பா.ஜ.கவினரும், இந்து முன்னணியினரும் தேவையி்ல்லாத பிரச்னையை செய்து வருவதாக குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT