தற்போதைய செய்திகள்

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்: மதிமுக மாநாட்டில் தீர்மானம்

விருதுநகர் சூலக்கரையில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ் தலைமை வகித்தார்.

எஸ். பாண்டியன்

கச்சதீவை கைப்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் சூலக்கரையில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் வரவேற்புரை வழங்கினார். மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில், மாநில மாணவரணிச் செயலாளர் ராஜேந்திரன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாசித்தார்.

மதிமுக வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிடுவது என்றும், அதற்கு முன்னதாக தொடர்ந்து ஊழல் புகாரில் சிக்கி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அகற்ற வீயூகம் வகுத்து செயல்பட வேண்டும்.  தவறான பொருளாதார கொள்கையால் விழ்ச்சியடைந்து இருக்கும், இந்திய   பொருளாதார இறையாண்மையை மீட்டு எடுப்போம்.காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக் கூடாது, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையை அந்த அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஈழத்தமிழர் பிரச்னைக்கு தனி சுதந்திரத் தமிழ் ஈழமே தீர்வு ஆகும்.

தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் அரசு மதுக்கடைகளை மூடவும், முழு மதுவிலக்கை அமுல்படுத்தவும் வேண்டும்.தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் 36.78 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ.3 வழங்க வேண்டும். உலக நாடுகளில் அணுசக்தி தொடர்பாக கருத்துக் கணிப்பில் 80 சதவீதம் பேர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதனால், கூடங்குளம் அணுமின் நிலையங்களையும் மூட வேண்டும்.

சிங்கள் மீனவர்களால் தமிழர் மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் உடனடியாக கச்சாதீவை இந்தியா மீட்க வேண்டும். காவிரியில் தொடர்ந்து தமிழர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்கு முறை குழு ஆகிய அமைப்புகளை அமைக்க வேண்டும்.  தமிழகத்தில் உள்ள தாமிரபரணி, வைகை, பாலாறு, காவிரி உள்ளிட்ட 33 ஆற்றுப்படுகைகளில் அதிக அளவில் மணல் கொள்ளை நடந்து வருவதாலும், இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுதாலும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.தென்மாவட்டங்களில் ரயில்வே திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். மதுரையில் இருந்து அரபு நாடுகளுக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கு விமான நிலையங்களை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14   தீர்மானங்கள் இம்மநாட்டில் நிறைவேற்றப்பட்டன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT