சென்னையில் நாளை அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக சட்டப்பேரவையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழகஅரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை (செப்.17) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக சட்டப்பேரவையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழகஅரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு பல்வேறு நீர்வாக சீர்திருத்த பணிகளை மேற்கொண்டு நிதிநெருக்கடியை சீரமைத்து வருகிறார். இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாக பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நாளை (செப்.17) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.