முகப்பு
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் தாது மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க பரிசீலனை: ஜி.கே. வாசன்

நாடு முழுவதும் தாது மணல் தள்ளுவதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.இது தொடர்பாக

Updated On : 18 செப்டம்பர், 2013 at 6:35 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 7:13 PM

நாடு முழுவதும் தாது மணல் தள்ளுவதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.இது தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கார்னட், இல்மனைட் போன்ற தாது மணல்களை அள்ள தமிழக அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. அரிய வகை தாது மணல்களை அள்ளுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.தமிழக அரசைப் பின்பற்றி நாடு முழுவதும் தாது மணல் அள்ளுவதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஏற்கெனவே திட்டமிட்ட பாதையிலேயே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

முறைகேடான வழிகளில் தாது மணல் அள்ளப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தாது மணல்களை அள்ளுவதற்கு தடை விதித்து முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (செப். 17) உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஜி.கே. வாசன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.