நாசரேத் அருகே தந்தை, மகள் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை
நாசரேத் அருகே உடையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (54). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வெள்ளரி, கத்தரி விவசாயம் செய்து வருகின்றார். இஅவருடைய மனைவி ராசாத்தி (48). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன்.
நாசரேத் அருகே தந்தை - மகள் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
நாசரேத் அருகே உடையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (54). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வெள்ளரி, கத்தரி விவசாயம் செய்து வருகின்றார். இஅவருடைய மனைவி ராசாத்தி (48). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன்.
ஒட்டப்பிடாரத்தில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இரண்டாவது பெண் லீமா வழக்குரைஞருக்குப் படித்து தந்தையுடன் இருந்து பணி செய்து வருகிறார். மகன் செஞ்சு (16) நாசரேத்தில் பள்ளியில் படித்து வருகிறார்.
Advertisement
இந்நிலையில், நேற்று மனைவி ராசாத்தியை ஒட்டப்பிடாரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு அனுப்பி விட்டு, பைக்கில் தன் மகள் லீமாவுடன் வந்தார் செல்லத்துரை. அப்போது, அவரை, மர்ம கும்பல் ஒன்று, சரமாரியாக வெட்டியது. அதனை மகள் தடுத்தார். ஆனால், அவருக்கும் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவத்தில் தந்தை மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பலியாயினர். இது குறித்து, சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜகோபால், நாசரேத் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.