வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்!
புவனகிரி அருகே உள்ள சொக்கங்கொல்லை கிராமத்தில் மதியழகன் என்பவரது சொந்தமான வீட்டின் முன்புறம் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. ஆனால் வீட்டிற்குள் மதுபாட்டில்களை வைத்து 24 மணி
சிதம்பரம் அருகே வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள டாஸ்மாக் மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புவனகிரி அருகே உள்ள சொக்கங்கொல்லை கிராமத்தில் மதியழகன் என்பவரது சொந்தமான வீட்டின் முன்புறம் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. ஆனால் வீட்டிற்குள் மதுபாட்டில்களை வைத்து 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் வீட்டிற்குள் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பீர்பாட்டில்கள் 72 பெட்டிகளும், குவாட்டர் பாட்டில்கள் 42 பெட்டிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து வளர்மதி (45), இவரது உறவினர் மணிகண்டன் (32) ஆகிய இருவரை கைது செய்தனர்.