திருவண்ணாமலை இன்று காலை லேசான நிலஅதிர்வு
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள புதுத்தெரு பகுதிகளில் வீடுகளில் இருந்த பொருட்கள் விழுந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை இன்று காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான வேங்கிகால், நல்லவன்பாளையம் பகுதிகளில் இன்று காலை 8.30 மணியளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் உள்ள பொதுமக்கள் இந்த நிலஅதிர்வை உணர்ந்தனர்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள புதுத்தெரு பகுதிகளில் வீடுகளில் இருந்த பொருட்கள் விழுந்ததாக மக்கள் தெரிவித்தனர். மேலும் நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.