முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டியில் விசாரணைக் கைதி மரணம்: உறவினர்கள் முற்றுகை

பண்ருட்டியில் விசாரணைக் கைதி ஒருவர் மரணம் அடைந்தார். இதை அடுத்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

பண்ருட்டியில் விசாரணைக் கைதி ஒருவர் மரணம் அடைந்தார். இதை அடுத்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பண்ருட்டி பேருந்து நிலைய பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் தரகு வேலை செய்து வந்தவர் முருகன் (40). வடலூரில் வசித்து வந்த இவருக்கு மனைவி வாசுகி (34) மகள் அபி(10), மகன் சுரேஷ் (8) ஆகியோர் உள்ளனர்.

கடந்த திங்கள் அன்று, முருகனை லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனராம். பின்னர் வாசுகியின் சகோதரர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு முருகனை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை நேற்று மீண்டும் விசாரணைக்காக முருகனை போலீஸார் பண்ருட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அவரை இரவு போலீஸார் விசாரித்ததாகத் தெரிகிறது. அப்போது முருகன் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது உடல் பண்ருட்டி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த முருகன் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத் தக்கது.

இதை அடுத்து முருகனின் உறவினர்கள் பண்ருட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →