முகப்பு
தற்போதைய செய்திகள்

அக்.3-ல் பல்கலைக்கழகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்: அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பு முடிவு

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஆட்சி மன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற அக்.3-ம் தேதி பல்கலைக்கழகங்கள் முன்பு வேலை நேரத்திற்கு பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நா

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஆட்சி மன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற அக்.3-ம் தேதி பல்கலைக்கழகங்கள் முன்பு வேலை நேரத்திற்கு பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் சி.மதியழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது:

பெங்களூரில் அண்ணையில் நடைபெற்ற அனைத்திந்திய பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் பல்கலைக்கழகங்களில் ஆட்சி மன்றம், ஆளவை மன்றம் ஆகியவற்றில் ஊழியர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்.3-ம் தேதி ஒட்டு மொத்த ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு அக்.3-ம் தேதி வேலைநேரத்திற்கு பிறகு 1 மணி நேரம் அந்தந்த பல்கலைக்கழக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை அலுவலகம் முன்பு அக்.3-ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என சி.மதியழகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.