புரட்டாசி 2-வது சனிக்கிழமை : ஆநிரை தலைவனாக காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத் தலைவன்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத் தலைவன்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதர் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் என்ற பெயர் கொண்டுள்ளார்.
இக்கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் உற்சவருக்கு பல்வேறு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. நிகழாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை (21.9.2011) உற்சவரான ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆலிலைக் கண்ணனாக காட்சியளித்தார்.
இரண்டாவது சனிக்கிழமையான 28-ம் தேதி பசுக் கூட்டங்களின் தலைவனாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று உற்சவரையும், மூலவரையும் வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில் நிர்வாகமும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவும் செய்திருந்தது.
காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில், இலங்கை அசோகவனத்தில் இருக்கும் சீதைக்கு தமது மோதிரத்தை ஸ்ரீ அனுமன் மூலமாக அனுப்பும் கோலத்தில், ஸ்ரீ கோதண்டராமர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். இக்கோயிலிலும் திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.