தற்போதைய செய்திகள்

ஆம்பூரில் இரு வீடுகளில் பூட்டு உடைத்து திருட்டு :  35 சவரன் நகை திருட்டு

ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் அருகாமையில் உள்ள இரு தெருக்களில் இரு வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு 35 சவரன் தங்க நகை வெள்ளிக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது.

எம். அருண்குமார்

ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் அருகாமையில் உள்ள இரு தெருக்களில் இரு வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு 35 சவரன் தங்க நகை வெள்ளிக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது.

ஆம்பூர் பசவேஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (36).  இவருடைய தாய் ராஜேஸ்வரி (62).  இவர்கள் இருவர் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள தன்னுடைய மற்றொரு மகன் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுவிட்டார்.  ரஜினிகாந்த் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார்.  இவரும் தன்னுடைய பணி காரணமாக வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வரவில்லை.  வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்தது.காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறந்திருந்துள்ளது.  உள்ள சென்றுபார்த்த போது அனைத்து அறைகளின் கதவுகளின் பூட்டு உடைத்து திறக்கப்பட்டு அறைக்குள் வைக்கப்பட்டிருந்த 5 பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  பீரோவுக்குள் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது.

மற்றொரு வீட்டிலிரும் திருட்டு :

35 சவரன் நகை திருட்டு போன தெருவிற்கு பக்கத்தில் உள்ள கவரை தெருவில் வசிப்பவர் பார்வதியம்மாள் (60).  இவர் குடியாத்தத்தில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு சனிக்கிழமை காலை வந்துள்ளார்.  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்தே இருந்துள்ளது.  உள்ளேயிருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 30 கிராம் வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.5 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவை திருடுபோயிருந்தது.

தகவலின் பேரில் ஆம்பூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT