தற்போதைய செய்திகள்

சென்னை ஊர்க்காவல்படை வீரர் மதுரையில் நீரில் மூழ்கிச் சாவு

சென்னையைச் சேர்ந்த ஊர்க்காவல்படை வீரர் மதுரை அருகே கிணற்றில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.  சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (37). ஊர்க்காவல்படை வீரர். மதுரையில்

ஜெயப்பாண்டி

சென்னையைச் சேர்ந்த ஊர்க்காவல்படை வீரர் மதுரை அருகே கிணற்றில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.

  சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (37). ஊர்க்காவல்படை வீரர். மதுரையில் ஊர்க்காவல்படை வெள்ளி விழாவை முன்னிட்டு நடந்துவரும் விளையாட்டு மற்றும் தனித்திறன் போட்டியில் பங்கேற்க வந்திருந்தார். அவருடம் நண்பர்கள் சிலரும் காரில் காஞ்சரம்பேட்டை பகுதிக்குச் சென்றனர். அங்கு தனியார் கிணற்றில் குளிக்க ஆசைப்பட்டு இறங்கியுள்ளனர். இதில் நீச்சல் தெரியாமல் முருகன் நீரில் மூழ்கியுள்ளார்.

  அவரைக் காப்பாற்ற சக தோழர்கள் முயன்றும் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று முருகன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முருகன் நீரில் மூழ்கி இறந்தது குறித்து சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த இடத்தில் சென்னை வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஊர்க்காவல் படையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT