தற்போதைய செய்திகள்

சிலைமான்: கணவன், மனைவி, மகன் தற்கொலை

மதுரை சிலைமான் பகுதியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி,மகன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

ஜெயப்பாண்டி

மதுரை சிலைமான் பகுதியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி,மகன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

  சிலைமான் மீனாட்சிநகர் செüராஷ்டிர காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணாராம் (51). தறி நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி பிருந்தா (47). மகன் குபேந்திரன் (28). மூத்த மகளுக்கு திருமணமாகி எல்.கே.டி.நகரில் வசிக்கிறார். குபேந்திரன் பி.பி.ஏ.படித்துவிட்டு ஷேர் மார்க்கெட் தொழில் செய்துவந்துள்ளார்.

  குபேந்திரன் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து ஷேர்மார்க்கெட் தொழில் செய்த நிலையிóல அதில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பலரிடமும் அவர் கடன் வாங்கியுள்ளார். கடன்காரர்கள் அதிக வட்டி கேட்டு தொல்லை கொடுத்ததாக கடந்த ஜூலையில் சிலைமான் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது இருதரப்பையும் போலீஸார் சமரசம் செய்து அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது.

  இந்தநிலையில்,  ஞாயிறு காலையில் நீண்டநேரம் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது தறிமிஷின் கட்டையில் நூல் பாவு கயிறால் கிருஷ்ணாராமும், அவரது மனைவி பிருந்தாவும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சிலைமான் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் டி.பாலமுருகன் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது குபேந்திரனும் தூக்கில் தொங்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

 இதையடுத்து 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். மேலும் வீட்டிலிருந்த தாள்களும் கைப்பற்றப்பட்டன. அதில் தங்கள் மரணத்துக்கு குறிப்பிட்ட 6 பேர் காரணம் என எழுதப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து விசாரிப்பதாக போலீஸார் கூறினர். இதுதொடர்பாக சிலரைப் பிடித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

 தற்கொலை செய்தோர் 7 அடி உயரத்தில் தொங்கியது குறித்தும் தீவிரமாக விசாரித்துவருவதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT