கழிவுநீர் கால்வாய் தகராறில் இரண்டு பேரை வெட்டிய வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
கழிவுநீர் கால்வாயை அடைத்த தகராறில் தந்தை, மகனுக்கு கத்தி வெட்டு விழுந்தது. இவ்வழக்கில் தந்தை மகன் உட்பட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வாணியம்பாடி சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தற்போதைய செய்திகள்கழிவுநீர் கால்வாய் தகராறில் இரண்டு பேரை வெட்டிய வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
கழிவுநீர் கால்வாயை அடைத்த தகராறில் தந்தை, மகனுக்கு கத்தி வெட்டு விழுந்தது. இவ்வழக்கில் தந்தை மகன் உட்பட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வாணியம்பாடி சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கழிவுநீர் கால்வாயை அடைத்த தகராறில் தந்தை, மகனுக்கு கத்தி வெட்டு விழுந்தது. இவ்வழக்கில் தந்தை மகன் உட்பட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வாணியம்பாடி சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆம்பூர் அடுத்த உமராபாத் அருகில் உள்ள பாவரதன்பட்டறை பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் சுப்பிரமணி. சுப்பிரமணி தனது இடத்தில் உள்ள கால்வாயை அடைத்தார். இதனால் கழிவுநீர் அன்பு வீட்டிற்குள் நுழைந்தது. இதனையடுத்து இரு வீட்டாருக்கும் தகராறு நடந்து வந்ததது. இந்நிலையில் இது தொடர்பாக மீண்டும் கடந்த 2010 ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மற்றும் அவரது மகன் ராஜ்குமார், மருமகன் சிவா ஆகிய மூவரும் சேர்ந்து அன்பு மற்றும் அவரது மகன் விமல்குமாரை கத்தியால் வெட்டினர். இதில் படுகாயமடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிóச்சை பெற்றனர்.
இதுக்குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணி, ராஜ்குமார், சிவா ஆகிய மூவரையும் கைது செய்து வாணியம்பாடி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி பரமராஜ் திங்கள்கிழமை வழக்கிய தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என உறுதி செய்து மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.