முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நூதன மோசடி : வேலூரைச் சேர்ந்த 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வேலூரைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 30 செப்டம்பர், 2013 at 10:30 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வேலூரைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் சின்ன குருசாமி நாயக்கர் மகன் முருகன் (49). இவரிடம் மூன்று நபர்கள் வந்து குறிப்பிட்ட ஒரு சலவை சோப்பு நிறுவனத்தில் இருந்து வருவதாய் கூறியுள்ளார்கள். மேலும் சோப்பின் விளம்பரத்திற்காக ரூ.20 மதிப்புள்ள சோப்புகளை ரூ.15-க்கு தருவதாகவும், ஒவ்வொரு சோப்பிற்குள்ளும் பரிசு கூப்பன் இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். இப் பரிசுக் கூப்பனில் என்ன பொருள் பெயர் உள்ளதோ, அந்தப் பொருளை பாதி விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளார்கள். இதனை நம்பிய முருகன் இரு சோப்புகளை வாங்கியுள்ளார். அதில் உள்ள பரிசுக் கூப்பனில் குக்கர் என்று இருந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் என்றும், ரூ.1500 கொடுத்தால் குக்கரை தருவதாகவும் வந்த நபர்கள் கூறியுள்ளார்கள். இதனை நம்பிய முருகன் ரூ.1500 கொடுத்துள்ளார்.

வந்த நபர்கள் பரிசுப் பொருள் தாங்கள் வந்த வாகனத்தில் இருப்பதாகவும், அதனை எடுத்து வருவதாகவும் கூறிச் சென்றுள்ளனர். சென்றவர்கள் திரும்பி வராததில் சந்தேகமுற்ற முருகன் தனது இரு சக்கர வாகனத்தில் போய் பார்த்துள்ளார்.

Advertisement

அப்போது அந்த மூன்று நபர்களும் தாங்கள் வந்த சுமோ காரில் தப்பி ஓட முயன்றுள்ளார்கள். இதனையடுத்து மூவரையும் பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் முருகன் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள், வேலூர் கஸ்பா, நெடுந்து தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் பிரகாஷ் (33), வேலூர் கஸ்பா, தர்மகர்த்தா பரமசிவமுதலி தெருவைச் சேர்ந்த சேகர் மகன் சந்திரசேகர் (29), வேலூர், தோட்டப்பாளையம், டி.வி.எஸ்.நகரைச் சேர்ந்த பத்ராச்சலம் மகன் அரிகிருஷ்ணன் (44) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.