நெல்லை திமுக, தென்காசி காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுத்தாக்கல்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி. தேவதாசசுந்தரம், தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மு.கருணாகரனிடம், தனது
திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் சி. தேவதாசசுந்தரம், தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே. ஜெயக்குமார் ஆகியோர் புதன்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி. தேவதாசசுந்தரம், தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மு.கருணாகரனிடம், தனது வேட்புமனுவை புதன்கிழமை பிற்பகல் 2.13 மணிக்கு தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன், டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் மு. உமாமகேஷ்வரி, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன் ஆகியோர் உடன் வந்தனர்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே. ஜெயக்குமரா், புதன்கிழமை தென்காசியில் கோட்டாட்சியரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக மாணிக்கம் என்பவரும், சுயேட்சையாக போட்டியிட அழகுமலை என்பவரும் மனுத்தாக்கல் செய்தனர்.