முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் தீவிர வாகனச் சோதனை

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ, ஆம் ஆத்மி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள  நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு பகலாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதேபோல் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, மதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத்தாக்கல் தொடங்கி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கிய உள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளது. வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.இதேபோல் இம்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 3 பறக்கும்படை, 3 கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறக்கும்படை அதிகாரிகள் சுழற்சி முறையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி பேரவைத் தொகுதியில் அபிஷேகப்பட்டி, பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் கருங்குளம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் சேரன்மகாதேவி போக்குவரத்து வளைவு உள்பட அந்தந்த தொகுதியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் இரவு பகலாக வாகனச் சோதனையில் ஈடுபட்டு் வருகின்றனர்.

புதன்கிழமை திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து ரூ. 60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இம்மாவட்டத்தில் திருநெல்வேலி, மக்களவைத் தொகுதிகளில் வாகனங்கள் சோதனையிடப்பட்டு, வாகனத்தின் டிரைவர், உரிமையாளர் போன்ற விவரங்கள், டிரைவரின் செல்போன் எண் போன்ற தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இந்த சோதனையில் நோயாளி இல்லாமல் செல்லும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தப்பவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →