முகப்பு
தற்போதைய செய்திகள்

நோட்டா விழிப்புணர்வு பரப்புரை பிரசாரம் சிதம்பரம் வந்தது!

தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் நோட்டா விழிப்புணர்வு பரப்பரை பிரசார வாகனம் வியாழக்கிழமை சிதம்பரம் நகருக்கு வந்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் நோட்டா விழிப்புணர்வு பரப்பரை பிரசார வாகனம் வியாழக்கிழமை சிதம்பரம் நகருக்கு வந்தது.

தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்ககம், தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்து நோட்டா குறித்து தமிழக முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. சிதம்பரம் நகருக்கு வந்த பிரசாரக்குழுவினர் பஸ் நிலையம் பகுதியில், மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தெரிவித்தது: உங்கள் பகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பாவிடில், வாக்களிக்காமல் இருக்கக் கூடாது. உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள நோட்டா என்ற கடைசி பொத்தானை அழுத்தி வாக்காளர்கள் பதிவு செய்யலாம் என பிரசாரத்தில் தெரிவித்தனர்.

பிரசாரத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க மாநிலத் தலைவர் பூமொழி, பொதுச்செயலாளர் மதியழகன், துணைத் தலைவர் ஜெயராமன், துணைச் செயலாளர்கள் ராஜூ, பச்சைமுத்து, சேலம் மாவட்டச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், நிர்வாகக்குழு உறுப்பினர் விஜயகுமார், ஈரோடு மாவட்டத் தலைவர் செயலாளர் பெரியசாமி, சேலம் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments