விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் காயம்
விருதுநகர் அருகே முத்துலிங்காபுரம், ரவீந்திரா ஃபயர் ஒர்க்ஸ்ஸில் பட்டாசு கழிவுகளைச் சேர்த்து, பசை காய்ச்சினர். அப்போது அவை திடீரென வெடித்ததில், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமர் (22), ஜமீன்சல்வா
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:24 AM
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
விருதுநகர் அருகே முத்துலிங்காபுரம், ரவீந்திரா ஃபயர் ஒர்க்ஸ்ஸில் பட்டாசு கழிவுகளைச் சேர்த்து, பசை காய்ச்சினர். அப்போது அவை திடீரென வெடித்ததில், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமர் (22), ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (35) இருவரும் காயம் அடைந்தனர். இருவரும் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வச்சகாரப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.