தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை தீ விபத்து:  2 பேர் காயம்

விருதுநகர் அருகே உள்ளது முத்துலிங்காபுரம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள 40 அறைகளில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பசை தயாரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தினால் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் அருகே உள்ளது முத்துலிங்காபுரம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள 40 அறைகளில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பட்டாசுகளில் தாள்களை சுற்றி ஒட்டுவதற்காக பழைய பட்டாசு கழிவுகளை போட்டு பசை தயாரிக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாரத விதமாக கழிவுகளில் உள்ள கரிமருந்து திடீரென பற்றியதால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அப்பணியில் ஈடுபட்டிருந்த சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமர்(22), ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.உடனே தொழிற்சாலையில் இருந்த பணியாளர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக வச்சககாரப்பட்டி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT