தற்போதைய செய்திகள்

விருதுநகர் தொகுதியில் இதுவரையில் ஒரு பெண் உள்பட 37 பேர் வேட்பு மனு தாக்கல்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் வேட்பாளர் உள்ளிட்ட 11 பேர் சனிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதுவரையில் போட்டியிடுவதற்காக ஒரு

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் வேட்பாளர் உள்ளிட்ட 11 பேர் சனிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதுவரையில் போட்டியிடுவதற்காக ஒரு பெண் வேட்பாளர் உள்பட 37 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் கடந்த 29-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. அன்றைய நாளில் சிபிஎம்(எம்.எல்) வேட்பாளர் கார்த்திகைசாமி உள்ளிட்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ஏப்.2-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன், லோக் சத்தா கட்சியின் வேட்பாளர் பிரதீப்குமார், அதிமுக மாற்று வேட்பாளர் தர்மராஜன் உள்ளிட்ட 6 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 3-ம் நாளில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாமுவேல்ராஜ் உள்ளிட்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 4-வது நாள் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் கமலவேல்செல்வன் உள்ளிட்ட 4 பேரும், 5-ம் நாளான வெள்ளிக்கிழமை திமுக வேட்பாளர் ரத்தினவேல் உள்ளிட்ட 6 பேரும் என மொத்தம் 26 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

கடைசி நாள்:

சனிக்கிழமை கடைசி நாள் என்பதால் காலையில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் முன்பாகவே வளாகத்திற்கு முன்பு சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதையடுத்து குறிப்பிட்ட நேரம் நெருங்கியதும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த மோகன்ராஜ்(63), திமுக மாற்று வேட்பாளராக கோ.தளபதி(60), அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் காரியாபட்டி நெடுங்குளத்தைச் சேர்ந்த மகாலிங்கம்(36), தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த மோகனின் மனைவி தீபா(34), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன்(64), திருநெல்வேலி செவல்குளத்தைச் சேர்ந்த கேசவன்(29), சென்னை போரூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், பேரையூர் அருகே டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், பாண்டியராஜன்(35), சாத்தூர் படந்தாலைச் சேர்ந்த மாரிமுத்து(45) மற்றும் அருப்புக்கோட்டை அழகர்சாமி(47) உள்ளிட்ட 11 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

இதுவரையில் சுயேட்சைகள் 25 பேர் உள்ளிட்ட 37 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில், தேசிய பார்வர்டு பிளாக்கட்சியின் சார்பில் தீபா என்ற பெண் வேட்பாளர் மட்டுமே போட்டியிட மனுச்செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT