தற்போதைய செய்திகள்

பைக் மீது டேங்கர் லாரி மோதல்: மாணவர்கள் 2 பேர் சாவு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த சிக்கந்தர் சுல்தான். இப்பகுதியில் கசாப்பு கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரது மகன் முஹமது அபுபக்கர்(20).

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பைக் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து சனிக்கிழமை இரவு  உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த சிக்கந்தர் சுல்தான். இப்பகுதியில் கசாப்பு கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரது மகன் முஹமது அபுபக்கர்(20). காரியாபட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். பாலையம்பட்டியைச் சேர்ந்த எபினேசர்(18). இவர் தற்போது பிளஸ்2 தேர்வு எழுதியுள்ளார். சனிக்கிழமை இரவு முஹம்மது அபுபக்கருடன் கறிக்கடை பணத்தை வசூல் செய்வதற்காக பந்தல்குடி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது, எபினேசரும் உடன் சென்றுள்ளார்.

பணம் வசூல் செய்து விட்டு 11 மணிக்கு அருப்புக்கோட்டை திரும்பியுள்ளனர். அப்போது பந்தல்குடி நான்கு வழிச்சாலையில் வரும் போது துத்துக்குடியிலிருந்து-மதுரை நோக்கிச் சென்ற டேங்கர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இது தொடர்பாக பந்தல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து வரிச்சியூரைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜாங்கம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT