தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் சாவு

விருதுநகர் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ்(35). இவர் சூலக்கரை தொழில் பேட்டையில் உள்ள ஆடை உற்பத்தி நிலையத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு பணியை

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இரு சக்கர வாகனத்தில் வளைவில் திரும்பும் போது தவறி விழுந்த தொழிலாளி தலையில் பலத்த காயம் அடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

விருதுநகர் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ்(35). இவர் சூலக்கரை தொழில் பேட்டையில் உள்ள ஆடை உற்பத்தி நிலையத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, ஆடை உற்பத்தி நிலையத்திலிருந்து 4 வழிச்சாலைக்கு வருவதற்காக திரும்பியுள்ளார். அப்போது, கல்லில் பட்டு வாகனம் இடறியதால் தவறி கீழே விழுந்தாராம்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் கிடந்தவரை, பின்னால் வந்த தொழிலாளர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாராம். இச்சம்பவம் தொடர்பாக சூலக்கரை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT