தற்போதைய செய்திகள்

விருதுநகர் மக்களவை தொகுதியில் 27 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: விவரங்கள் இல்லாத 10 மனுக்கள் நிராகரிப்பு

விருதுநகர் மக்களவை தொகுதியில் 27 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில், கையொழுத்து, சொத்துப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அளிக்காத 10 வேட்பாளர்களின் மனுக்கள்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் 27 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில், கையொழுத்து, சொத்துப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அளிக்காத 10 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, தொடர்ந்து கடந்த 5-ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள்,  சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 37 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.அம்மனுக்களின் மீது பரிசீலனை ஆட்சியர் வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்களவை தொகுதி தேர்தல் பார்வையாளர் அனில்குமார் தலைமையில், ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி உள்ளிட்ட அலுவலர்களின் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது. இதில், வேட்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஒவ்வொரு மனுக்களையும் பரிசீலனை தேவையான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளனவா, கையொழுத்து மற்றும் சொத்துப்பட்டியல் உள்ளிட்டவைகளை அளிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 27 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதேபோல், வேட்பு மனு படிவத்தில் வேட்பாளர்  கையொழுத்து போடாமல் இருந்தது. சொத்துப் பட்டியல் விவரங்கள் அளிக்காத  சுயேட்சை வேட்பாளர்கள் ந.ஆனந்த், பி.ஐ.டி.தியாகராஜன், ஆர்.பி.ரெங்கராஜன், ஜி.மணிகண்டன், ஆர்.கேசவன், ஆர்.அழகர்சாமி, மகா.ராமகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்களான கோ.தளபதி, பாலசுப்பிரமணியம், ஆர்.தர்மராஜா உள்ளிட்ட 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்ததாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹிரஹரன் அறிவித்தார்.

மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், வேட்பு மனு பரிசீலனை முடிந்துள்ளது. இதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்களின் வேட்பாளர்கள் வருகிற 9-ம் தேதி 3 மணிக்குள் வந்து திரும்ப வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தவிர, சுயேட்சைகள் ஆகியோருக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட இருப்பதாகவும், தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

வாக்குவாதம் செய்த வேட்பாளர்:  இதில் முன்மொழிந்தவர்களின் எண்ணிக்கை குறைவு, உரிய இடங்களில் கையொழுத்து இல்லாத மனுக்களை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தள்ளுபடி செய்தார். இதில், சிவகாசியைச் சேர்ந்த வேட்பாளர் பி.ஐ.டி.தியாகராஜன் என்ற யோகராஜ் என்பவரின் மனுவில் 5-ம் பக்கத்தில் கையொழுத்து இல்லாமலும், அதேபோல் படிவம்-26ல் சொத்து பற்றிய விவரங்கள் அளிக்கப்படாமல் இருந்ததால் தள்ளுபடி செய்வதாக ஆட்சியர் கூறினார்.அதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையொழுத்து போடுவதாக தெரிவித்து மனுவை கேட்டதற்கு பிரிசீலனை முடிந்தது, இனிமேல் வேட்பு மனு எல்லாம் தரமுடியாது என ஆட்சியர் தெரிவித்தார். அதையடுத்து அரசு அச்சடித்து கொடுத்த உறுதி மொழி படிவத்தில் இந்தியா என்பதற்கு பதிலாக இந்தி என தவறா இருக்குது.   இதெல்லாமல் தவறாக நினைக்காமல், நான் கையொழுத்து போடாமல் விட்டதை தவறு என்கிறீர்கள். அதனால் வேட்பு மனு படிவத்தில் உடனே கையொழுத்திடுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT