சித்திரை விசுத் திருவிழா: தாமிரவருணியில் நீராடி பக்தர்கள் தரிசனம்
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சித்திரை விசுத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சித்திரை விசுத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி தரிசனம் செய்தனர்.
சித்திரை விசுத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பல்வேறு பகுதியில் இருந்து பாபநாசம் கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி தரிசனம் செய்தனர். இதையொட்டி பாபநாசம் பாபநாசநாதர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் தீர்த்தவாரி நடைபெற்றது. சித்திரை விசுத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாபநாசம் வந்தனர்.