முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். ஆட்சி நடக்கவில்லை ஐ.பி.எஸ். ஆட்சி நடக்கிறது: அன்புமணி

ஜெயலலிதா தமிழகத்தில் போலீஸாரை வைத்து அரசியல் கட்சிகளை அச்சுறுத்தி வருகிறார். தற்போது தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். ஆட்சி நடக்கவில்லை ஐ.பி.எஸ். ஆட்சிதான் நடந்து வருகிறது என முன்னாள் மத்திய

Updated On : 14 ஏப்ரல், 2014 at 5:42 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:30 AM

ஜெயலலிதா தமிழகத்தில் போலீஸாரை வைத்து அரசியல் கட்சிகளை அச்சுறுத்தி வருகிறார். தற்போது தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். ஆட்சி நடக்கவில்லை ஐ.பி.எஸ். ஆட்சிதான் நடந்து வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தின்போது பேசினார்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மாசிலாமணி மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் காமராஜ் ஆகியோரை ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணி செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் அய்யப்பன்தாங்கல் பகுதியில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.அப்போது அவர் பேசியதாவது:

15 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்து நரேந்திரமோடி சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.அங்கு குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு என அனைத்தும் கிடைத்து மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். எனவே மோடியை பிரதமராக்கினால் இந்திய மக்களும் சந்தோஷமாக இருப்பர்.தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்ய தவறிவிட்டது.

Advertisement

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் வாக்களிக்கவில்லை, கருணாநிதி ஆட்சியில் இருந்து போக வேண்டும் என்பதற்காகதான் வாக்களித்தனர். 47 ஆண்டுகாலமாக திமுக, அதிமுகவிற்கு வாக்களித்து மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தற்போது மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். இன்று தேர்தல் நடந்தால் கூட தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி 30 இடங்களில் வெற்றிபெறும். தமிழக அரசு இலவச திட்டம் என்ற பெயரில் மக்களை பிச்சைகாரர்களாக்குகின்றனர். காணொலி காட்சி மூலம் நலத்திட்டங்களை துவங்கி வைக்கும் முதல்வர் ஏன் காணொலி காட்சி மூலம் பிரச்சாரம் செய்யாமல் ஹெலிகாப்டரில் செல்கின்றார்? தமிழக மக்களே மாற்றத்திற்கு வழிவிடுங்கள், தமிழகத்தில் மாற்றம் துவங்கி தில்லியிலும் மாற்றம் ஏற்பட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இதில் பாமக செயற்குழு உறுப்பினர் ஆலப்பாக்கம் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் சேகர், அய்யப்பன்தாங்கள் ஊராட்சிமன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, மதிமுக நிர்வாகிகள் கந்தன், முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பூந்தமல்லி பஸ் நிறுத்தம் அருகே திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் யுவராஜை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.