நெல்லை மாவட்டத்தில் 54,204 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
மக்களவைத் தேர்தல் ஏப். 24 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களது பெயரை மார்ச் 25 ஆம் தேதி வரை வாக்காளர்
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 பேரவைத் தொகுதிகளில் 54,204 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 69 ஆயிரத்து 549 ஆக உயர்ந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப். 24 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களது பெயரை மார்ச் 25 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் 3,574 வாக்காளர்களும், வாசுதேவநல்லூர் தொகுதியில் 4,890 வாக்காளர்களும், கடையநல்லூர் தொகுதியில் 5,225 வாக்காளர்களும், தென்காசி தொகுதியில் 5,048 வாக்காளர்களும், ஆலங்குளம் தொகுதியில் 4,388 வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 5,432 புதிய வாக்காளர்களும்,
ராதாபுரம் தொகுதியில் 5,278 வாக்காளர்களும், நான்குனேரி தொகுதியில் 6,263 வாக்காளர்களும், திருநெல்வேலி தொகுதியில் 6,573 வாக்காளர்களும், பாளையங்கோட்டைத் தொகுதியில் அதிகபட்சம் 7,533 புதிய வாக்காளர்கள் உள்பட 54,204 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 25,695, பெண்கள் 28,497 ஆகும். இதையடுத்து இம்மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 69 ஆயிரத்து 549 ஆக உயர்ந்துள்ளது.