முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்

காலை பூதேவி, ஸ்ரீதேவி சமேத தில்லைகோவிந்தராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை மட்டையடி உற்சவமும், திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீதில்லைக்கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரம் மற்றும் அவதார நட்சத்திர தின உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

காலை பூதேவி, ஸ்ரீதேவி சமேத தில்லைகோவிந்தராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை மட்டையடி உற்சவமும், திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமாளை தரிசித்தனர். பின்னர் இரவு பூதேவி, ஸ்ரீதேவி சமேத தேவாதி தேவன் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதிஉலா வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.