முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் விபத்து: 3 மாணவர்கள் பலி

புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று அதிகாலை 2.30 மணி அளவில்  இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:02 AM
பகிர்:

தில்லியில் பல்கலைக்கழக வளாகத்தில் வேகமா சென்ற இருசக்கர வாகனம் மரத்தில் மோதி  விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று அதிகாலை 2.30 மணி அளவில்  இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த டிவைடரில் வேகமாக மோதியது.

அதே வேகத்தில்மரத்தில் மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தூக்கி விசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 3 பேரும் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனிற்றி 3 மாணவர்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த  மாணவர்களில் ரவிசங்கர் மற்றும் குப்தா பீகாரின் கயா மாவட்டத்தைச் சேரந்தவர்கள் என்றும், சந்தோஷ் என்பவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை ச் சேர்ந்தவர் என்றும் போலீஸார் அறிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வசந்த் குன்ச் வடக்கு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →