நெல்லை அருகே மின்னல் தாக்கி பெண் சாவு
மானூர் அருகே லட்சுமிபுரம் காலனித் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி முத்தம்மாள் (45). கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை
திருநெல்வேலி அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் வெள்ளிக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
மானூர் அருகே லட்சுமிபுரம் காலனித் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி முத்தம்மாள் (45). கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது இடி மின்னலுடன் அப்பகுதியில் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் முத்தம்மாளுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முத்தம்மாள் இறந்தார்.
இது குறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பம் கடுமையாக இருந்து வருகிறது. வெள்ளிக்கிழமையும் கடும் வெப்பம் இருந்தது. மாலையில் மேக மூட்டத்துடன் மழைக்கான அறிகுறி தென்பட்டது. எனினும் மழை பெய்யவில்லை. மானூர் பகுதியில் இடி மின்னலுடன் மிதமான பெய்தது.