முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீநடராஜர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் கோயம்புத்தூர் தேவார பாடசாலை சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:03 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் கோயம்புத்தூர் தேவார பாடசாலை சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உ.வெங்கடேச தீட்சிதர் தலைமை வகித்தார். கோவை காமாட்சிபுர ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரையாற்றினார். திருப்பராய்ந்துறை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த கந்தசாமி வாழ்த்துரையாற்றினார். கோயம்புத்தூர் தேவார பாடசாலை அமைப்பாளர் தினேஷ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிக்கு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் மாணிக்கவாசகரை பற்றியும், சிதம்பரத்தில் பெருமை பற்றியும் உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.