தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் பணியை கண்காணிக்க மேற்பார்வை அலுவலர்கள் நியமனம்

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், வாக்கு பதிவு மேற்கொள்வதற்கு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வந்துள்ளனரா

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கு சட்டப்பேரவை தொகுதிவாரியாக மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், வாக்கு பதிவு மேற்கொள்வதற்கு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வந்துள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதோடு, வாக்குப்பதிவின் போது தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு குறைகள் இருந்தால் உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும் வேண்டும்.

அதன் அடிப்படையில் ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளரான சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) பாபு, சிவகாசி தொகுதிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் பிரபாகரன், விருதுநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வீ.ஜெயக்குமாரும், சாத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதனும், அருப்புக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு மகளிர் திட்ட அலுவலர் பிச்சையும், திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தியும் என மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT