ஒக்கியம் துரைப்பாக்கத்தில் அதிமுக - பாஜக மோதல்; போலீஸார் தடியடி
தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போட முயற்சி நடப்பதாகக்
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒக்கியம் துரைப்பாக்கத்தில் அதிமுக - பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது.
தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போட முயற்சி நடப்பதாகக் கூறி பாஜகக, பாமகவினர் திரண்டனர்.
இருதரப்பினரும் நூற்றுக்கணக்கில் திரண்டதால் போலீஸôர் லேசான தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
பாஜக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வாக்குச் சாவடி மைந்துள்ள அரசு பள்ளிக்கூட வளாகத்தில் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸôர் தடுத்து நிறுத்தினர். இதனால் ராஜீவ் காந்தி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்த தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் இல. கணேசன் மாலை 4.30 மணிக்கு அங்கு வந்தார். வாக்குச் சாவடிக்குள் சென்ற பாஜக ஏஜெண்டுகளிடம் நிலையைமைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் சென்னையில் ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது. எனவே, கள்ள ஓட்டு போடுதல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதுவே பாஜகவுக்கு கிடைத்த வெற்றிதான்.
காலை முதல் பல்வேறு பகுதிகளில் வாக்குப் பதிவை பார்வையிட்டு வருகிறேன். மோடி அலையை இந்தத் தேர்தலில் உணர முடிகிறது என்றார்.
ஐ.டி. ஊழியர்கள்:
தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 5 லட்சத்து 7 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இதில் சுமார் 3 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் என்பதால் ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காவிட்டாலும் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்ததை பல இடங்களில் காண முடிந்தது.