தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே போலீஸாரிடம் தகராறு செய்த தேமுதிக நிர்வாகியின் மண்டை உடைந்தது

விருதுநகர் அருகே வாக்குச் சாவடியில் போலீஸாருடன் தகராறு செய்த தேமுதிக நிர்வாகியின் மண்டை உடைந்ததால் ஆத்திரம் அடைந்த  பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வாக்குச் சாவடியில் போலீஸாருடன் தகராறு செய்த தேமுதிக நிர்வாகியின் மண்டை உடைந்ததால் ஆத்திரம் அடைந்த  பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு 2 மணிநேரம் பாதிப்பு அடைந்தது.

விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி(35). இக்கிராமத்தின் தேமுதிக கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். இக்கிராம  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையத்திற்கு வாக்கு பதிவு செய்வதற்காக வந்தாராம். அப்போது, அந்த மையத்திலிருந்தவர்கள் அடையாள சீட்டை வாங்கி பார்த்து, அடுத்த வளாகத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு செல்லும் போது தோளில் தேமுதிக கட்சியின் மப்ளருடன் சென்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் துண்டை அகற்றுமாறு கூறியதால் வாய்த்தகராறு முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மலைச்சாமி காவல் ஆய்வாளரை கீழே தள்ளினாராம். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சோலைராஜ் என்ற போலீஸார் தாக்கி கீழே தள்ளியதில் மலைச்சாமியின் மண்டை உடைந்தது.

இச்செயலை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் காவல் துணைக்கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் மற்றும் போலீஸார் ஆகியோர் வாக்கு பதிவு தாமதமாகிறது. அதனால், மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு வாக்காளிக்கச் சென்றவரை தாக்கிய போலீஸார் மீது நடவடி்ககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். தேமுதிக தொண்டரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

அதன் பின் படுகாயம் அடைந்தவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். இப்போராட்டத்தினால் வாக்கு பதிவு 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT