தற்போதைய செய்திகள்

விருதுநகர் மக்களவை தொகுதியில் வாக்கு பதிவு நிலவரம்

விருதுநகர் மக்களவை தொகுதியில் வியாழக்கிழமை காலையில் 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில், நகராட்சி மற்றும் கிராமங்களிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் பெண்கள் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்தனர்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் வியாழக்கிழமை காலையில் 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில், நகராட்சி மற்றும் கிராமங்களிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்தனர். இதில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியைச் சேர்ந்த, திருச்சுழி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வலுக்கலொட்டி கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் பெண்கள் காலையிலேயே வாக்குகளை பதிவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிலும், நிற்பதற்கு முடியாமலும், கடும் வெய்யில் அடித்ததாலும் பெண்கள் மரத்தடியில் காலையில் 8 மணிக்கு வந்து நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர்.

அதையடுத்து, ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து சென்றனர். அதேபோல், விருதுநகர் மக்களவை தொகுதியில் பாலவநத்தம், கூரைக்குண்டு, மெட்டுக்குண்டு கிராமத்திலும், தென்காசி மக்களவை தொகுதியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த அழகாபுரி, கரிசல்குளம் கிராமங்களிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இதில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு மணிக்கொரு முறை வாக்கு பதிவு நிலவரம் வருமாறு: காலையில் 9 மணி நிலவரப்படி 16.23 சதவீதமும், 11 மணிக்கு 36.03 சதவீதமும், 1 மணிக்கு 46.05 சதவீதமும் மற்றும் 3 மணி நிலவரப்படி 59.01 சதவீதமும் வாக்கு பதிவாகியிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT