முகப்பு
தற்போதைய செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை: ஊராட்சி மன்றத்தலைவர் உட்பட 16 பேர் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூத்தனூரில் பஞ்சாயத்து தேர்தல் முன்விரோத காரணமாக வியாழக்கிழமை மாலையில் வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை செய்தனர். இது தொடர்பாக ஊராட்சி

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூத்தனூரில் பஞ்சாயத்து தேர்தல் முன்விரோத காரணமாக வியாழக்கிழமை மாலையில் வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை செய்தனர். இது தொடர்பாக ஊராட்சி மன்றத்தலைவர் உட்பட 16 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை வட்டம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன்  கிருஷ்ணமூர்த்தி(27). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசன், வேலாயுதம், ராஜூ மகன் முத்து, நாராயணன் மகன் வேலு, பெரியசாமி மகன் வடமலை( ஊராட்சி மன்றத்தலைவர்) ஆகியோருக்குமிடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை கிருஷ்ணமூர்த்தி காட்டுஎடையார் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். வரும்வழியில் கூத்தனூர் அய்யனார் கோயில் அருகில் ஒரு புதரில் மறைந்திருந்த ஒரு கும்பல் கிருஷ்ணமூர்த்தி வழிமறித்து தாக்கி கிருஷ்ணமூர்த்தியை இழுத்துக்கொண்டுபோய் அய்யனார் கோவில் அருகேயிருந்த மெக்கானிக் கடையில் கழுத்து அறுத்து படுகொலை செய்து ஒரு சாக்கில் வைத்து போட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சாக்குமூட்டையில் ரத்தம் கரைகளுடன் சடலம் இருப்பதை கண்டு அதிர்ந்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஊர் மக்கள் எலவனாசூர்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் எலவனாசூர்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைப் கைப்பற்றி பிரேதே பரிசோதனைக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடி ஊராட்சி மன்றத்தலைவர் வடமலை, வெங்கடேசனின் வீடுகளை சூறையாடி தீவைத்து கொளுத்தியதாக தெரிகிறது. இதனால்  கூத்தனூரில் கடந்த 2 நாட்களாக பொதுமக்களிடையே பெரும் பதற்றமும், பீதியும் நிலவி வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீஸார் ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடேசன், வடமலை உட்பட 16 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →