முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி: தொடக்க விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடக்க விழா திங்கள்கிழமை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி எல்.ஜான் சேவியர்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடக்க விழா திங்கள்கிழமை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி எல்.ஜான் சேவியர்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.2014-15-ம் கல்வியாண்டிற்கான முதல் வகுப்பு ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கி வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஏழை கிராமப்புற குழந்தைகளும் தரமான ஆங்கில வழிக் கல்வியை கட்டணம் இல்லாமல் பெற தமிழக முதல்வர் வழிவகை செய்துள்ளார். இந்த வாய்ப்பை கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். விழாவில் ஏ.ஏ.பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் அ.மகேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகப் பை, சீருடை, காலணி உள்ளிட்டவற்றை வழங்கி கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி எல்.ஜான் சேவியர்ராஜ் பேசுகையில், ஆங்கில வழி வகுப்பு அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளை 14 மாணவர்கள் இப் பிரிவில் சேர்ந்துள்ளது பாராட்டுக்குரியது என்றார்.

விழாவில் ஏராளமான பெற்றோர், பள்ளி கிராம கல்விக் குழுவினர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் கலந்து கொண்டனர். ஆசிரியை ச.பொன்மலர் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →