முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆதரவற்ற 20 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவற்ற 20 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தற்போதைய செய்திகள்

ஆதரவற்ற 20 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவற்ற 20 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:08 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவற்ற 20 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சி.எஸ்.ஐ. சபையின் கம்பார்ஸன் நிறுவனம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் புனித அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300 மாணவர்கள் தங்கி இலவசமாக கல்வி பயின்று வருகிறார்கள். இந்த மாணவர்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 20 பெற்றோர் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஓராண்டிற்கு மாதம் சுமார் ரூ.3000 மதிப்புள்ள குடும்பத்தை நடத்துவதற்குத்  தேவையான பொருட்கள் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தேர்வு பெற்ற 20 பெற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வளர்ச்சி மையத்தின் தாளாளர் ஆர்.ஜேசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது. மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கு.ராக்லாண்டு நிக்கோலஸ் வரவேற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட, சிவநாச்சியார் தொடக்கப் பள்ளியின் தாளாளர் வழக்குரைஞர் சுந்தர்ராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →